தமிழ் சினிமா

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ அப்டேட் @ மாலை 6.31

செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தின் அப்டேட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.31 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அஜித்தின் 63-வது படமாக உருவாகிறது குட் பேட் அக்லி. இந்த படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்கிறார். 2025 பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் படத்தின் அப்டேட் குறித்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தை தயாரிக்கும் மைத்திரி மூவி மேக்கர்ஸ், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் சமூக வலைதளங்களில் இது குறித்து பதிவிட்டுள்ளனர். இதை அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதோடு இந்த தகவலை சமூக வலைதளங்களில் வைரலாக பதிவு செய்து வருகின்றனர். கடந்த வாரம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதாக தகவல் வெளியானது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT