சென்னை: தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர் சங்கத்துக்கு இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். 1201 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கத்தின் 2024- 26-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில், தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி பெற்றுள்ளார்.
பொதுச் செயலாளராக ஆர். அரவிந்தராஜ், பொருளாளராக அறந்தாங்கி சங்கர், துணைத்தலைவர்களாக எஸ்.வி.சோலைராஜா, குட்டி பத்மினி, இணைச் செயலாளர்களாக ஆதித்யா, விக்ராந்த் வெற்றி பெற்றுள்ளனர்.