‘ஈட்டி’ படத்தை அடுத்து ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி வரும் ‘ஐங்கரன்’ படத்தின் ஒரு பாடல் காட்சியைத் தவிர முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. திரைப்படத்துறையினரின் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்ததும் ஜி.வி.பிரகாஷ், மஹிமா நடிப்பில் எடுக்கவிருக்கும் அப்பாடல் காட்சியை கோவாவில் படமாக்க படக்குழு புறப்படுகிறது. காதல், ஆக்ஷன் பின்னணியில் தயாராகியுள்ள இப்படத்தில் சமூக பொறுப்பையும் இயக்குநர் தொட்டிருக்கிறார், ‘ஈட்டி’ படத்தில் ஹீரோ அதர்வாவை விளையாட்டு வீரராக வைத்ததைப்போல ‘ஐங்கரன்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒரு மெக்கானிக்கல் கல்லூரி மாணவனாக வருகிறார். படத்தின் மேக்கிங் ஸ்டைல் விஷயங்களும் ‘ஈட்டி’ படத்தை மிஞ்சும் என்கிறார்கள், படக்குழுவினர்.