தமிழ் சினிமா

“பெரியம்மாவுக்கு நிகரானவர்கள்தானே சோறாக்கிப்போட்ட அத்தனை அம்மாக்களும்…” – சூரியின் கண்ணீர் ட்வீட்

செய்திப்பிரிவு

‘பெரியம்மாவுக்கு நிகரானவர்கள்தானே சோறாக்கிப்போட்ட அத்தனை அம்மாக்களும்…’ என கண்ணீருடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சூரி.

காவிரி மேலாண்மை வாரியம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆகிய பிரச்சினைகளுக்காக சினிமாத்துறையினர் சார்பில் நேற்று கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்பினர் கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிகர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால், காமெடி நடிகர் சூரியின் பெரியம்மா இறந்ததால், அவரால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

“பெரியம்மாவின் திடீர் மரணத்தால், காவிரிக்காக நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும், பச்சைத் தண்ணீர் கூடப் பருகாமல் நானும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன். பெரியம்மாவுக்கு நிகரானவர்கள்தானே சோறாக்கிப் போட்ட அத்தனை அம்மாக்களும்!” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சூரி.

SCROLL FOR NEXT