தமிழ் சினிமா

மீண்டும் இணைந்த ‘ஜோ’ ஜோடி!

செய்திப்பிரிவு

சென்னை: ‘ஜோ’ பட வெற்றிக்குப் பிறகு ஆண்களின் பிரச்சினைகளைப் பேசும் கதையில் ஹீரோவாக நடிக்கிறார் ரியோ ராஜ். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை கலையரசன் தங்கவேல் இயக்குகிறார். பிளாக்‌ஷிப் நிறுவனம் இணை தயாரிப்பு செய்யும் இதில் ‘ஜோ’ படத்தில் நடித்த மாளவிகா மனோஜ் நாயகியாக நடிக்கிறார். ரியோ ராஜ்- மாளவிகா மனோஜ் இந்தப் படத்திலும் இணைகின்றனர். ஆர்ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், கஜராஜ், ஜென்சன் திவாகர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சித்துகுமார் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. “திருமணமான ஆண்களின் பிரச்சினைகளைப் பேசும் படம் இது. பெண்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக சொல்லப் போகிறோம்” என்கிறது படக்குழு.

SCROLL FOR NEXT