தமிழ் சினிமா

கேங்ஸ்டர் படத்தை இயக்கும் ‘ரேசர்’ இயக்குநர்

செய்திப்பிரிவு

சென்னை: ‘ரேசர்’ படத்தை இயக்கிய சதீஷ் என்கிற சாட்ஸ்ரெக்ஸ் அடுத்து கேங்ஸ்டர் கதையை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். உண்மைச் சம்பவத்துடன் கற்பனை ஆக்க்ஷன் கதையாக உருவாகிறது.

ரேசர் படத்தைத் தயாரித்த ஹஸ்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் கார்த்திக் ஜெயாஸ் இதையும் தயாரிக்கிறார். விக்கிமேக் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் இசை அமைக்கிறார். சந்தோஷ் நாயகனாகவும் நாயகியாக பர்வீனும் நடிக்கின்றனர்.

முக்கிய வேடத்தில் அருள்தாஸ், ஜெயக்குமார், சில்மிஷம் சிவா, சிவம், அருண் உதயன், குட்டி கோபி, பூவையார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தின் தொடக்க விழா புதுச்சேரியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயிலில் நடந்தது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

SCROLL FOR NEXT