சென்னை: பிரபல நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக் கதைகள் திரைப்படங்களாகி வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்தின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
சாதாரண பேருந்து நடத்துநராக இருந்து படிப்படியாக முன்னேறி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர் ரஜினிகாந்த். அவர் வாழ்க்கை பலருக்கு உத்வேகமாக உள்ளது. அவர் வாழ்க்கைக் கதை திரைப்படமானால், ஏராளமானோருக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தி தயாரிப்பாளர் சஜித் நாடியத்வாலா, ரஜினிகாந்தின் பயோபிக்கை தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர், ரஜினிகாந்தை சில மாதங்களுக்கு முன் சந்தித்துப் பேசிய ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருவதாகவும் இதை யார் இயக்க போகிறார்? ரஜினிகாந்தாக யார் நடிக்கப் போகிறார் என்பது உள்ளிட்ட விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.