தமிழ் சினிமா

உள்ளாட்சி அரசியலை மையப்படுத்தும் ‘எலக்சன்’

செய்திப்பிரிவு

சென்னை: ‘உறியடி', 'பைட் கிளப்' படங்களில் நடித்த விஜயகுமார் அடுத்து நடிக்கும் படம் 'எலக்சன்'. இதை ‘சேத்துமான்' தமிழ் இயக்கியுள்ளார். பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, திலீபன், பாவல் நவகீதன், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்தப் படத்துக்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இதை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆதித்யா தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மே 17-ம் தேதி வெளியாகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT