தமிழ் சினிமா

காதலரை பிரிந்தார் ஸ்ருதிஹாசன்

செய்திப்பிரிவு

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இவர் நடித்த இனிமேல் என்ற இசை ஆல்பம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் டாட்டூ கலைஞர் சாந்தனு என்பவரைக் காதலித்து வந்தார். இவரும் திருமணம் செய்து கொள்ளாமல் மும்பையில் சேர்ந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது.

இருவரும் தாங்கள் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் ஸ்ருதிஹாசன், சாந்தனுவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்டப் புகைப்படங்களை திடீரென நீக்கியுள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் இன்ஸ்டாவில் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளனர். இதனால் இருவரும் தங்கள் காதல் உறவை முறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT