தமிழ் சினிமா

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சினிமாவை பற்றிய படம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் பல படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. கமலின் ‘சத்யா' படம் மூலம் இயக்குநரான இவர், ரஜினி நடித்த ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’உட்பட தமிழில் சில சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். சின்னத்திரை தொடர்களையும் இயக்கியுள்ளார்.

இவர் இப்போது இந்தி, தெலுங்கில் ‘ஹீரோ ஹீரோயின்' என்ற படத்தை இயக்கி வருகிறார். சினிமாவை பற்றிய படமான இதில் திரையுலக நட்சத்திரங்களின் காதல் கதைகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது. இதில், திவ்யா கோஷ்லா, கதாநாயகியாகவே நடிக்கிறார். பரேஷ் ராவல் இயக்குநராக வருகிறார்.முக்கிய கேரக்டர்களில் நடிக்கும்நடிகர், நடிகைகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடக்க இருக்கிறது. அங்கு மட்டும் 35 லொகேஷன்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

SCROLL FOR NEXT