தமிழ் சினிமா

அருண் விஜய் நடிக்கும் ’ரெட்ட தல’

செய்திப்பிரிவு

சென்னை: பாலா இயக்கத்தில் நடித்த ‘வணங்கான் படத்தை முடித்துவிட்டார், அருண் விஜய். இதில் அவர் ஜோடியாக ரேவதி பிரகாஷ் நடித்துள்ளார். இதையடுத்து ‘மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக இதில் நடிக்கின்றனர். சாம். சி.எஸ் இசையமைக்கிறார். பிடிஜி யூனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கிறார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘ரெட்ட தல’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில்அருண்விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் தலைப்பு வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT