சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஈரமான ரோஜாவே’ மூலம் பிரபலமானதிரவியம் நாயகனாக நடிக்கிறார். பார்வதி, விஸ்வநாதன், கிருஷ்ணவேணி, அஜய், கண்ணன், பிரியா, ருக்கு, ஸ்ருதி, மார்கதரிசி, லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தத் தொடரை பிரவீன் பெனட் இயக்குகிறார். ஒரு தொழிலதிபரின் குடும்பம் மற்றும் அவர்களின் உறவுகளைச் சுற்றி இந்தத் தொடரின்கதை அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 6.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது.