ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி நடித்த ‘லென்ஸ்’ திரைப்படம் மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகி மிகுந்த கவனத்தை ஈர்த்தது. அப்படத்தை தமிழில் இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார். இந்நிலையில் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் அடுத்தப்படத்தின் திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறார். விரைவில் தொடங்க உள்ள இப்படத்தை இயக்குநர் பாலா தனது ’பி ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ளார். விரைவில் படக்குழு, நடிகர், நடிகைகள் அறிவிப்பு இருக்கும் என்று தெரிகிறது.