தமிழ் சினிமா

விநாயகர் சதுர்த்திக்கு லிங்கா பர்ஸ்ட் லுக்

செய்திப்பிரிவு

ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'லிங்கா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 29) அன்று வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்‌ஷி சின்கா, அனுஷ்கா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'லிங்கா'. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் படுதீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு நடபெறுகிறது. 'லிங்கா' படத்தின் போஸ்டர்கள், புகைப்படங்கள் என எதுவுமே இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் 'லிங்கா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். 'லிங்கா' இசையை தீபாவளி அன்றும், படம் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT