தமிழ் சினிமா

நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

மும்பை: தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருபவர் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதியார் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான ‘பாரதி’ படத்தில் நடித்தவர். மகாராஷ்ட்ரா மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சாயாஷி ஷிண்டேவுக்கு நெஞ்சுவலி இருந்தது. இதையடுத்து சதாராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு இதயத்தில் அடைப்பு இருந்தது தெரியவந்தது . உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT