தமிழ் சினிமா

லோகேஷ் கனகராஜின் ‘ரஜினி 171’-ல் நடிக்க ரன்வீர் சிங்குடன் பேச்சுவார்த்தை!

செய்திப்பிரிவு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ரஜினி 171’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரன்வீர் சிங்குடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். இந்தப் டத்தின் அறிவிப்பு டீசர் ஏப்ரல் 22-ம் தேதி வெளியாக உள்ளது.

முன்னதாக இது தொடர்பாக வெளியான போஸ்டரில், ரஜினி கையில் கோல்டு கலர் கடிகாரங்கங்கள் செயினைப் போல பின்னப்பட்டு இருந்தன. இது டைம் டிராவல் கதையா என்பது குறித்த பல சந்தேகங்கள் ரசிகர்களிடையே எழுந்தன.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல மலையாள திரையுலகம் தரப்பிலிருந்து பிருத்விராஜை நடிக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. முன்னதாக, லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்தில் பாலிவுட்டிலிருந்து சஞ்சய் தத் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT