தமிழ் சினிமா

அருண் விஜய் ஜோடியாக 2 நடிகைகள்

செய்திப்பிரிவு

நடிகர் அருண் விஜய், அடுத்து நடிக்கும் படத்தை கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். இதை பிடிஜி யுனிவர்சல் நிறுவனத் தலைவர் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கிறார். இதன் தொடக்கவிழா சென்னையில் நடந்தது. லோகேஷ் கனகராஜ் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

அருண் விஜய்யின் 36 வது திரைப்படமான இதில் அவர் ஜோடியாக, சித்தி இட்னானி, தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றனர். மற்றும் ஹரீஷ் பெரேடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்சென்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பரபரப்பான ஆக்�ஷன் திரில்லர் படமாக இது உருவாகிறது. சாம் சி.எஸ். இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

பிடிஜி யுனிவர்சல் நிறுவனம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிக்கும் ‘டிமான்டி காலனி 2’, விக்ரம் ராஜேஸ்வர் இயக்கும் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ படங்களைத் தயாரித்துள்ளது.

SCROLL FOR NEXT