தமிழ் சினிமா

நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்

செய்திப்பிரிவு

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 62.

பாலா இயக்கத்தில் வெளியான ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பாவாக நடித்திருப்பார் விஸ்வேஷ்வர ராவ். தமிழ், தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராக புகழ்பெற்றவர். தனது 6 வயதில் இருந்தே நடிக்க தொடங்கிவிட்ட விஸ்வேஷ்வர ராவ் இதுவரை 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா தவிர்த்து சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், உடல்நல பாதிப்பு காரணமாக காலமான விஸ்வேஷ்வர ராவ் உடல் சென்னை சிறுசேரியில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கின்றன.

SCROLL FOR NEXT