தமிழ் சினிமா

விமானப் பணிப்பெண்கள் விஷாலுக்கு வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: ஹரி இயக்கியுள்ள ‘ரத்னம்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர்விஷால், அடுத்து ‘துப்பறிவாளன் 2’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம்அவர் இயக்குநராகிறார். இதற்காக அவர் கடந்தமாதம் லொகேஷன் பார்க்கலண்டன், அஜர்பைஜான், மால்டாஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்கிருந்து சென்னை திரும்பிய விஷாலுக்கு விமானப் பணிப்பெண்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஷால், “துபாய் வழியாக இந்தியா திரும்பும் போதுவிமான பணிப்பெண்களிடம் இருந்து எனக்கு கிடைத்த ஆசீர்வாதத்துக்கு நன்றி. காயத்ரி, டயானா,ரிஷிட், ரீனா, கிம் ஆகியோர் எனது நாளை உற்சாகமானதாக மாற்றினார்கள். எனக்காக வாழ்த்துக்குறிப்பு எழுதுவதற்கும் சாக்லெட் கொடுப்பதற்கும் நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற நிச்சயம் உழைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT