தமிழ் சினிமா

வன்முறை, போதை, ரத்தம் இல்லாமல் ஒரு படம்: ‘ஜீனி’ இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி, வாமிகா கபி உட்பட பலர் நடிக்கும் படம், ஜீனி. இதை மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அர்ஜுனன் இயக்குகிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதன் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

படம் பற்றி இயக்குநர் அர்ஜுனன் கூறும்போது, “குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. வன்முறை, போதை, ரத்தம் என எதுவும்

இல்லாமல் ஜாலியான படமாக இது இருக்கும். பெண் கதாபாத்திரங்கள் வலிமையாக இருக்கும். தாய், மகள், சகோதரி மற்றும் மனைவியின் உணர்ச்சிகளைச் சுற்றி படம் செல்லும். மகிழ்ச்சியான திரை அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். யானிக் பென் ஆக்‌ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார்” என்றார்.

SCROLL FOR NEXT