தமிழ் சினிமா

‘ஒய்ஃப்’ என்ற தலைப்பு ஏன்? - இயக்குநர் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: ஆர்ஜே விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘ஒய்ஃப்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், விஜய் பாபு, லல்லு, கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிக்கிறார். ஹேமநாதன் இயக்குகிறார். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்டின் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘ஒய்ஃப்’ என்ற தலைப்பு வைத்தது ஏன் என்று இயக்குநர் ஹேமநாதனிடம் கேட்டபோது, “கணவன்–மனைவிக்கு இடையிலான நவீன உறவை மையமாகக் கொண்டதுதான் இந்தப் படம். ஒவ்வொரு வீட்டிலும் மனைவி ஒரு குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். திருமணத்துக்குப் பிறகு மலரும் அன்பை எமோஷனலாக சொல்வதே என் நோக்கம். அதனாலேயே இந்தத் தலைப்பை தேர்வு செய்தோம். படத்தில் விஜய், நிகழ்ச்சி தொகுப்பாளராக நடித்துள்ளார். அனைத்து வயதினருக்கும் இந்தப் படம் பிடிக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT