தமிழ் சினிமா

ஹைபர் லூப் த்ரில்லர் கதையில் பரத்

செய்திப்பிரிவு

சென்னை: பரத், ஷான், ராஜாஜி , அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’. ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிக்கிறார். பாலா, ட்ரீம் ஹவுஸ் ஹாரூண், பிஜிஎஸ் புரொடக் ஷன்ஸ் பிஜிஎஸ் இணை தயாரிப்பு செய்கின்றனர். பிரசாத் முருகன் இயக்குகிறார். ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ளார். வசனம், பாடல்களை ஜெகன்கவிராஜ் எழுதியுள்ளார்.

படம்பற்றி பிரசாத் முருகன் கூறும்போது, “ஹைபர் லூப் வகையிலான த்ரில்லர் படம் இது. மனித வாழ்வில் சந்தர்ப்பம் தான் ஹீரோவும் வில்லனும். ஒரு பொருள் ஒரு மனிதன் கையில்எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான்அவன் அப்பொருளை நன்மைக்கோ, தீமைக்கோ பயன்படுத்துவான்.அப்படி நான்கு பேர் கைகளில் எதிர்பாராத விதமாகத் துப்பாக்கி கிடைக்கிறது. அது அவர்கள் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பது கதை. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது” என்றார்.

SCROLL FOR NEXT