தமிழ் சினிமா

ஃபேன்டஸி காமெடியில் நித்யா மேனன் 

செய்திப்பிரிவு

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து வரும் நித்யா மேனன், அடுத்து ஃபேன்டஸி ரொமான்ஸ் காமெடி படத்தில் நடிக்கிறார்.

பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் இதில், கதாநாயகர்களாக வினய் ராய், நவ்தீப் , பிரதீக் பாப்பர், தீபக் பரம்போல் நடிக்கின்றனர்.

இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காமினி, இதை எழுதி இயக்குகிறார். ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார்.

SCROLL FOR NEXT