உதயநிதி, வடிவேலு நடித்த ‘மாமன்னன்’ படத்துக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இதில் துருவ் விக்ரம் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.
படம்பற்றி மாரி செல்வராஜ் கூறும்போது, “இது என் ஐந்தாவது படம். இந்தப்படம் கபடி விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு ‘ஸ்போர்ட்ஸ் டிராமா’வாக இருக்கும். இந்தப் படத்தில் துருவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்தில் வலிமையாகவும் திறமையான இளைஞனாகவும் துருவ் விக்ரம், வித்தியாசமான கோணத்தில் திரையில் தோன்றுவார்”என்றார்.