தமிழ் சினிமா

மெட்ராஸ்காரனில் நிஹாரிகா 

செய்திப்பிரிவு

விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படம் மூலம் தமிழுக்கு வந்தவர், தெலுங்கு நடிகை நிஹாரிகா. இவர் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான நாகபாபுவின் மகள். இவர் இப்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.

எஸ்.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஷ் தயாரிக்கும் படம், மெட்ராஸ்காரன். இதில் மலையாள நடிகர் ஷேன் நிகாம் நாயகனாக நடிக்கிறார். கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இதை வாலி மோகன் தாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தில் நிஹாரிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

SCROLL FOR NEXT