தமிழ் சினிமா

வேந்தர் மூவிஸ் வெளியிடும் பூஜை

ஸ்கிரீனன்

விஷால் தயாரித்து நடித்து வரும் 'பூஜை' படத்தை பெரும் விலை கொடுத்து வேந்தர் மூவிஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

விஷால், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'பூஜை'. விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலமாக விஷாலே தயாரித்து வருகிறார். யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை ஹரி இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது. முக்கிய காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிவடைந்தன. இன்னும் 2 பாடல் காட்சிகள் மட்டுமே ஸ்விட்சர்லாந்தில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

விஷால் தயாரித்து வரும் இப்படத்தின் மொத்த வெளியீட்டு உரிமையினை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. தீபாவளி அன்று பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.

ஏற்கனவே இதே கூட்டணி, தீபாவளி 2013ல் 'பாண்டியநாடு' என்ற படத்தை வெளியிட்டு வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT