தமிழ் சினிமா

அன்பு மகளே... இளையராஜா உருக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, தி.நகரில் இளையராஜா வீட்டில் வைக்கப்பட்ட பவதாரிணியின் உடலுக்கு திரையுலகினர் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இயக்குநர்கள் சுதா கொங்கரா, வெங்கட் பிரபு, வெற்றிமாறன், மனோஜ், நடிகர்கள் ராமராஜன், விஜய் ஆண்டனி, சுப்பு பஞ்சு, நடிகை ராதிகா உட்பட ஏராள மான திரையுலகினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இசை அமைப்பாளர் இளையராஜா தனது மகள் பவதாரிணியுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ‘அன்பு மகளே’ என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள், ஆறுதல் கூறி வருகின்றனர்.

SCROLL FOR NEXT