தமிழ் சினிமா

2.0 ரிலீஸ் தள்ளிப்போகிறது; முன்கூட்டியே வெளியாகிறது காலா

செய்திப்பிரிவு

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறது.

முன்னதாக, ஏப்ரலில் இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2.0 படத்தின் விஷீவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இன்னும் நிறைவு பெறாததால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறது. படம் முழுமையாக முடிவைடய இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

2.0 படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் ஹாலிவுட்டின் பிரபல ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லைகா நிறுவனம் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்து வருகிறது.

இதற்கிடையில், பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27-ல் வெளியகும் எனக் கூறப்படுகிறது. காலா இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருவாதகவும் விரைவில் சென்சானருக்கு அனுப்பப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இத்திரைப்படம் ஆகஸ்ட் வெளியீடு எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT