தமிழ் சினிமா

அனிருத்தின் ஹுக்கும் - வேர்ல்டு டூர்

செய்திப்பிரிவு

சென்னை: இசையமைப்பாளர் அனிருத் தமிழ் தவிர இந்தி, தெலுங்கு மலையாளப் படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது 'ஹுக்கும்- வேர்ல்டு டூர்’ என்ற உலக இசைப் பயணத்தை துபாயில் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

பிராண்ட் அவதார் என்ற நிறுவனம், இந்தியாவைத் தளமாகக் கொண்ட ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை அமைப்பான பல்ஸ் இணைந்து இந்நிகழ்ச்சியை பிப். 10-ம் தேதி துபாயில் நடத்துகிறது. இதில் அனிருத்தின் பல ஹிட் பாடல்கள் இடம்பெற இருக்கின்றன.

இதுபற்றி அனிருத் கூறும்போது, “இந்த, உலக இசைச் சுற்றுப் பயணத்தின் மூலம், சினிமாவில் நான் அறிமுகமானதில் இருந்து எனது இசையைப் பாராட்டிய பார்வையாளர்களுடன் எனது வெற்றியையும் இசைப் பயணத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT