தமிழ் சினிமா

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா

ஸ்கிரீனன்

தெலுங்கில் பெரும் வரவேற்பை பெற்ற 'மனம்' படத்தை இயக்கியவர் விக்ரம் குமார். விக்ரம் குமார் இயக்கும் படத்தை தயாரித்து, நடிக்க இருக்கிறார் சூர்யா.

தமிழில் மாதவன் நடித்த 'யாவரும் நலம்' படத்தை இயக்கியவர் விக்ரம் குமார். அதற்குப் பிறகு தமிழில் வேறு எந்தொரு படத்தையும் இயக்கவில்லை.

அப்படத்தைத் தொடர்ந்து நாகேஸ்வர ராவ், நாகார்ஜூன், நாக சைந்தன்யா என மூன்று தலைமுறை நடிகர்களையும் ஒன்றிணைத்து தெலுங்கில் 'மனம்' என்ற படத்தை இயக்கினார். அப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

ஒரு கஷ்டமான கதையை, திரைக்கதை மூலம் எளிமையாக கையாண்டிருக்கிறார் என்று விமர்சகர்களாலும், மக்களாலும் கொண்டாடப்பட்டது 'மனம்'. அப்படத்தைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் வந்தது.

சூர்யாவைச் சந்தித்து அவரது தயாரிப்பு நிறுவனத்திற்காக கதை ஒன்றை கூறினார் விக்ரம் குமார். இதனைத் தொடர்ந்து சூர்யாவை இயக்கவிருக்கிறார் விக்ரம் குமார் என்று செய்திகள் வெளியானாலும், யாரும் அதனை உறுதி செய்யவில்லை.

இச்செய்தியினை உறுதி செய்யும் வகையில் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் ட்விட்டர் பக்கத்தில், "2டி நிறுவனத்தின் அடுத்த படத்தை மனம் இயக்குநர் விக்ரம்குமார் இயக்கவிருக்கிறார். சூர்யா நடிக்கவிருக்கிறார். மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் " என்று கூறியுள்ளார்கள்.

SCROLL FOR NEXT