தமிழ் சினிமா

ஆந்திரா, தெலங்கானாவில் ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ ரிலீஸ் இல்லை?

செய்திப்பிரிவு

தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ , சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலங்கானா, ஆந்திர பிரதேச மாநிலங்களில் மட்டும் இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்குப் பிறகு சில வாரங்கள் கழித்து வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பொங்கல் அன்று தெலுங்கில், மகேஷ் பாபு, ரவி தேஜா, வெங்கடேஷ், நாகர்ஜுனா நடித்துள்ள திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் ‘அயலான்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்றும் இதனால் பொங்கல் கழித்து இந்தப் படங்கள் அங்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கேரளா, கர்நாடகா உட்பட மற்ற மாநிலங்களில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT