"இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா; வாழ்க நற்றமிழர்" என கமல்ஹாசன் தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தமிழர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. உணர்வால் ஒன்றுபட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில், ஜல்லிக்கட்டு அவசரச் சட்டமும் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், கமல்ஹாசன் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா. சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றி. வாழ்க நற்றமிழர்!" எனப் பதிவிட்டுள்ளார்.