தமிழ் சினிமா

பைரசியை நியாயப்படுத்துவது பரிதாபத்துக்குரியது: சித்தார்த் 

செய்திப்பிரிவு

பைரசி ஒரு குற்றச்செயல்; அதை நியாயப்படுத்துவது பரிதாபத்துக்குரியது என நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார். முன்னதாக, 'அவள்' படம் தொடர்பாக தமிழ் ராக்கர்ஸ் இணையத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவருக்கு சித்தார்த் காட்டமாக பதிலளித்திருந்தார்.

'தமிழ் ராக்கர்ஸ் எப்பவும் எங்களை கைவிட்டதில்லை ப்ரோ' என்று ரசிகர் ஒருவர் கூறியதற்கு பதிலடியாக, 'உங்க மூஞ்சியெல்லாம் எங்க படத்தை காசு கொடுத்து பார்த்தால் எங்களுக்குத்தான் அசிங்கம். நீங்கள் தொடருங்கள். நன்றி' என்று சித்தார்த் கோபமாக தெரிவித்திருந்தார்.

அதன் நீட்சியாக இன்றும் அவர் ஒரு ட்வீட் பதிவு செய்திருக்கிறார்.

அதில், "பைரசி ஒரு குற்றச்செயல். அதை நியாயப்படுத்துவது பரிதாபத்துக்குரியது. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதை உங்களால் நியாயப்படுத்த முடியுமா? திருடனை திட்டினால் தப்பு. திருட்டைப் பார்த்து கொண்டாடுற மூஞ்சிய திட்டினா தப்பு. படத் தயாரிப்பாளர்கள் என்றால் அவமானங்களை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டுமா? திருப்பித் தரக் கூடாதா? மன்னிக்கவும், நாங்கள் திருப்பிக் கொடுப்போம்! அதையும் மீறி ட்ரால் செய்ய விரும்பினால் செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT