தமிழ் சினிமா

இளையராஜா இசையில் 'வட்டார வழக்கு'!

செய்திப்பிரிவு

‘டூ லெட்’ சந்தோஷ், ரவீனா ரவி, வெங்கடேசன், விசித்திரன் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘வட்டார வழக்கு’. மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கணேசன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டோனிஜான், சுரேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். படம் பற்றி இயக்குநரும் தயாரிப்பாளருமான கண்ணுச்சாமி ராமச்சந்திரன் கூறியதாவது:

இது 1985-ல் நடப்பது போன்ற கதையைக் கொண்ட படம். உறவினர்களுக்குள் நடக்கும் பிரச்சினையை மையமாக வைத்துஉருவாகி இருக்கிறது. ஒரு வட்டாரத்தில் நடக்கும் வழக்கை இந்தப் படம் பேசுவதால் ‘வட்டார வழக்கு’ என்று தலைப்பு வைத்துள்ளோம். மதுரை மேற்கு பகுதியில் உள்ள கிராமத்துப் பின்னணியில் படம் உருவாகி இருக்கிறது. படம் உண்மைக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். கதையும் உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. இளையராஜா இசை அமைத்திருக்கிறார். அவர் இசை, இந்தப் படத்துக்குப் பெரியபலம். இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

40 வருடங்களுக்கு முன் கிராமங்களில் இருந்த கலப்படமில்லாத காதல்,பகை, மற்றும் அசலான மனிதர்களைப் பற்றிய கதையை இதில் சொல்லி இருக்கிறேன். பிளாஷ்பேக் காட்சி 1960-களில் நடப்பது போல வரும். சக்தி பிலிம்பேக்டரிபடத்தை ரிலீஸ் செய்கிறது. இவ்வாறு கண்ணுச்சாமி ராமச்சந்திரன் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT