பாரதியார் (வலது ஓரம்), அருகில் மனைவி செல்லம்மாள், மகள் சகுந்தலா (அமர்ந்திருப்பவர், மகள் தங்கம்மாள் (நின்றிருப்பவர்), நண்பர்கள் ராமு, விஜயராகவன் 
தமிழ் சினிமா

பாரதியாரின் பிறந்தநாளை நவீன கவிதையின் பிறந்தநாளாகக் கொண்டாடுவோம்: கமல்ஹாசன்

செய்திப்பிரிவு

சென்னை: பாரதியாரின் பிறந்தநாளை நவீன கவிதையின் பிறந்தநாளாகக் கொண்டாடுவோம் என நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ட்வீட்டில், “சாகாவரம் கொண்ட வரிகளைப் பாவாக்கித் தந்த புலவன், காலம் கடந்தும் எளிய அரிய கருத்துகளால் தலைமுறைகளுக்கிடையே பாலமாய் இருக்கும் சிந்தனையாளன், வரிகளைச் சொன்னாலே மூச்சிலும் சக்தி பிறக்கவைக்கும் கந்தகக் கவிதைகளுக்குச் சொந்தக்காரன் பாரதியின் பிறந்த நாள் இன்று. மரபான வடிவத்தில் நவீன கவிதையின் பிறந்த நாளாகக் கொண்டாடுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT