நடிகர் அஜித்குமார் இப்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதில் த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. சில நாட்களுக்கு முன் படக்குழுவினர் சென்னைத் திரும்பினர்.
இந்நிலையில், படக்குழு மீண்டும் அஜர்பைஜான் சென்றுள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்டோர் நேற்று முன் தினம் அங்கு சென்றனர். நடிகர் அஜித்குமார் இன்று செல்ல இருக்கிறார். அங்கு சுமார் ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது.