சென்னை: விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜன.26-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் கோலார் தங்க வயல் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இதன் டப்பிங் பணிகளை மாளவிகா மோகனன் நிறைவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.