தமிழ் சினிமா

‘சரக்கு’ படத்தில் மதுவிலக்கு அமைச்சராக நாஞ்சில் சம்பத்

செய்திப்பிரிவு

சென்னை: ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில், மன்சூர் அலிகான் கதை எழுதி, தயாரித்து, நாயகனாக நடிக்கும் படம் ‘சரக்கு’. ஜெயக்குமார்.ஜெ இயக்குகிறார். அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியுள்ளார்.

மன்சூர் அலிகானுடன் கே.பாக்யராஜ், யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார், பழ.கருப்பையா, லியாகத் அலிகான் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் நாஞ்சில் சம்பத் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக நடித்துள்ளார். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் டிச.22-ம் தேதி வெளியாகிறது

SCROLL FOR NEXT