ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் 'வை ராஜா வை' படத்திற்காக தனுஷ் எழுதியுள்ள பாடலை, யுவன் இசையில் இளையராஜா பாட இருக்கிறார்.
கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'வை ராஜா வை'. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்தை தயாரித்து இருக்கிறது ஏ.ஜி.எஸ் நிறுவனம். இப்படத்தின் டீஸர் மட்டுமே வெளியாகி இருக்கும் நிலையில், யுவனின் இசை விரைவில் வெளிவர இருக்கிறது. படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இருக்கிறதாம். இதில் 4 பாடல்களை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். 'மூவ் யுவர் பாடி' என்ற பாடலை மட்டும் தனுஷ் எழுதியிருக்கிறார். தனுஷ் எழுதியிருக்கும் இப்பாடலை இளையராஜா பாடியிருக்கிறார்.
'3' படத்தின் இசைக்காக அனிருத் உடன் கைகோர்த்த ஐஸ்வர்யா தனுஷ், இப்படத்திற்காக யுவனுடன் கைகோத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. | தொடர்புடைய செய்தி:>வைரமுத்துவுடன் இணைய வாய்ப்பில்லை: இளையராஜா திட்டவட்டம்