செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் மற்றொரு நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
புத்தாண்டு அன்று இப்படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டது. சிவகுமார் தொடங்கி வைத்த இப்படத்தின் நாயகியாக சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது மற்றொரு நாயகியாக ரகுல் ப்ரீத் சிங்கும் ஒப்பந்தமாகியுள்ளார். பொங்கல் முதல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இப்படத்தின் இதர நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளது.