தமிழ் சினிமா

காக்கிச் சட்டையில் ஒரு கேங்க்ஸ்டர்! - விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ ட்ரெய்லர் எப்படி?

செய்திப்பிரிவு

சென்னை: அறிமுக இயக்குநர் கார்த்தி நடிப்பில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘ரெய்டு’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இறுகப்பற்று’ படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடித்துள்ள புதிய படம் ‘ரெய்டு’. அறிமுக இயக்குநர் கார்த்தி இயக்கும் இப்படத்தில் ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். இந்தப் படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று (நவ.03) வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: ’அவன் போலீஸ்ன்னு யார் சொன்னது? அவனும் நம்மள மாதிரி ஒரு கூலிப்படைதான்’ என்ற முத்தையாவின் வசனத்தின் பின்னணியில் போலீஸ் அதிகாரி கம் கேங்க்ஸ்டராக அறிமுகமாகிறார் விக்ரம் பிரபு. சிட்டியில் அட்ராசிட்டி செய்யும் ரவுடிகளை துவம்சம் செய்கிறார். துப்பாக்கி, அரிவாள்ன் வெட்டு, குத்து என ட்ரெய்லரிலேயே ரத்தம் தெறிக்கிறது. ரொமான்ஸுக்கு ஸ்ரீதிவ்யா, அனந்திகா என இரு நாயகிகள். ட்ரெய்லரில் வரும் சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை ஈர்க்கிறது. ஆக்‌ஷன், நாயகியுடன் டூயட், செண்டிமெண்ட் என படம் கமர்ஷியல் எண்டெய்னராக இருக்கும் என்பதை ட்ரெய்லரின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

‘ரெய்டு' ட்ரெய்லர் வீடியோ:

SCROLL FOR NEXT