சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் 'அஞ்சான்' இசையினை ஜூலை 22ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் வெளியிடப்படுகிறது.
சூர்யா, சமந்தா, சூரி, வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'அஞ்சான்' படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. யுவன் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். லிங்குசாமி தயாரித்திருக்கும் இப்படத்தை யு,.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவினை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வந்தார்கள். தேதி மற்றும் இடங்கள் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது ஜூலை 22ம் தேதி 'அஞ்சான்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். கமல்ஹாசன் இப்படத்தின் இசையினை வெளியிடுகிறார்.
ஆகஸ்ட் 15ம் தேதி இப்படத்தினை வெளியிடுகிறது யு.டிவி நிறுவனம்.