தமிழ் சினிமா

பயணம் மேற்கொள்ள ராஷ்மிகா அறிவுரை

செய்திப்பிரிவு

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக அவர் ‘அனிமல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் டிச.1ம் தேதி வெளியாக இருக்கிறது. ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வரும் அவர், ‘ரெயின்போ’, ‘கேர்ள்ஃபிரண்ட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பயணம் மேற்கொள்ளுங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

வெளிநாட்டில் தான் இருக்கும் புகைப்படங்களைவெளியிட்டுள்ள அவர், “ நான் பயணம் மேற்கொள்ள முடியாமல் இருக்கிறேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளுங்கள். உங்கள் சொந்த ஊருக்கோ, நண்பர்கள் வீடுகளுக்கோ, அல்லது உங்கள் கனவு பயண இலக்குக்கோ செல்லுங்கள். பயணம், உங்கள் அறிவையும் மனதையும் திறக்கிறது. உணவு, கலாச்சாரம், வாழ்க்கை முறை என வித்தியாசமான அனுபவம் கிடைக்கிறது. அதனால் அனைவரும் பயணம் மேற்கொள்ளுங்கள் ” என்று கூறி இருக்கிறார்.

SCROLL FOR NEXT