தமிழ் சினிமா

‘ரெபல்’ உண்மைச் சம்பவக் கதை

செய்திப்பிரிவு

சென்னை: இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார், கதையின் நாயகனாக நடிக்கும் ‘ரெபல்’, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகிறது. அறிமுக இயக்குநர் நிகேஷ்ஆர்.எஸ். இயக்குகிறார். இதில், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உட்பட பலர்நடித்துள்ளனர். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக் ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இதில் அதிரடி சண்டை காட்சிகள் இடம்பெறுகிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தற்போது இறுதிக் கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின்முதல் தோற்றத்தை, நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ளார்.

படம்பற்றி இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ் கூறும்போது, ''80-களில் நடந்த சில உண்மைச் சம்பவங்களைத் தழுவி இதன் திரைக்கதை உருவாக்கப் பட்டுள்ளது. இதன் கதை, கல்லூரியை களமாகக் கொண்டிருக்கிறது. கல்லூரி மாணவர்களுக்கான அரசியலும் பேசப்பட்டுள்ளது'' என்றார்

SCROLL FOR NEXT