தமிழ் சினிமா

மாரி 2 அப்டேட்: தனுஷ் படத்தில் பாடுகிறார் இளையராஜா

ஐஏஎன்எஸ்

தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ஒரு பாடலைப் பாட இருக்கிறார்.

இது குறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு தெய்வீக மகிழ்ச்சி அனுபவம். ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். அதேவேளையில் இது எங்களை சிலிர்படையவும் செய்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டுடனேயே இளையராஜாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனுஷ் பகிர்ந்திருந்தார்.

'மாரி 2' படத்தை பாலாஜி மோகன் இயக்க, தனுஷ் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT