தமிழ் சினிமா

வேல்ராஜ் இயக்கத்தில் சசிகுமார்

செய்திப்பிரிவு

சென்னை: தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, பவர் பாண்டி உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் வேல்ராஜ். இவர் தனுஷின், ‘வேலையில்லா பட்டதாரி’ படம் மூலம் இயக்குநர் ஆனார். அடுத்து 'தங்கமகன்' படத்தை இயக்கினார் . இப்போது வெற்றிமாறனின் ‘விடுதலை 2 ம் பாகம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவரும் அவர், சசிகுமார் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை ஜேஎஸ்பி பிலிம் ஸ்டூயோஸ் சார்பில் ஜேஎஸ்பி சதீஷ்குமார் தயாரிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்பட கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT