தமிழ் சினிமா

நடிகை சுனைனா மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

‘காதலில் விழுந்தேன்' படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சுனைனா. மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், திருத்தணி,நீர்ப்பறவை, வன்மம், தெறி உட்பட பல படங்களில் நடித்தார். அவர் நடிப்பில் ரெஜினா என்ற படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில், கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க மூக்கில் ஆக்ஸிஜன் டியூப்புடன் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், திரும்பி வந்துவிடுவேன்” என கூறியுள்ளார். இந்தப் புகைப்படம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் நலம் பெற ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT