சென்னை: ‘குலேபகாவலி', 'ஜாக்பாட்' படங்களை இயக்கிய கல்யாண் இப்போது இயக்கியுள்ள படம், ‘80-ஸ் பில்டப்’. இதில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகியாக ராதிகா பிரீத்தி நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. 80-களில் நடக்கும் இந்தப் படத்தின் கதை, ஃபேன்டசி டிராமா-வாக உருவாகி வருகிறது. 18 நாட்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.