அஜித் நடிக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி 22-ம் தேதி முதல் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
'விவேகம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தீபாவளி வெளியீடு என்று முடிவு செய்யப்பட்டு இருந்தாலும், எப்போது படப்பிடிப்பு தொடங்கப்படும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
இது குறித்து படக்குழுவினரிடையே விசாரித்த போது, "தற்போது திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. இன்னும் ஓரிரு நாட்கள் அப்பணிகள் முடிவு பெறும். இன்னொரு புறம் அஜித்துடன் நடிக்கவுள்ளார்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 22-ம் தேதி முதல் ஒரே கட்டமாக படப்பிடிப்புக்குச் சென்று முடிக்கலாம் என்று தீர்மானித்திருக்கிறார்கள். அதற்குள் படக்குழுவினர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்தனர்.
முன்னதாக, இப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். அவர் விலகிவிடவே, தற்போது இசையமைப்பாளர் யார் என்பதிலும் குழப்பம் நீடித்து வருகிறது.