தமிழ் சினிமா

இன்ஸ்டாவுக்கு மீண்டும் திரும்பிய லட்சுமி மேனன்

செய்திப்பிரிவு

சென்னை: நடிகை லட்சுமிமேனன், தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில், அவர் கும்கி, சுந்தரபாண்டியன், மஞ்சப்பை, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், றெக்க , வேதாளம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘சந்திரமுகி 2’ படத்திலும் நடித்திருந்தார்.

சமூக வலைதளத்தில் இருந்து விலகி இருந்த இவர் இப்போது மீண்டும் அதற்குத் திரும்பி இருக்கிறார். சுமார் 64 வாரங்களுக்குப் பிறகு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளது

SCROLL FOR NEXT